அதிரடித் தளபதிகள் அறிமுகம் - விகடன்
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2008, 03:11.07 PM GMT +05:30 ]
1975 ஜூலை 27 பிரபாகரனின் துப்பாக்கி தனது முதல் குண்டைத் துப்பிய நாள். யாழ்ப்பாணம் மேயர் துரையப்பாவைச் சுட்டுக் கொன்றது அது!
16 வயதில் வீட்டை விட்டுப் புறப்பட்டவரின் வாழ்க்கை, இப்போது காடுகளுக்குள், பதுங்கு குழிகளுக்குள். 'பிரபாகரனையும் அவரது உளவுப் படைத் தளபதி பொட்டு அம்மனையும் கைது செய்யும் நாளில்தான் இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படும்' என்று ஜனாதிபதி மாளிகையில் இருந்து கடந்த வாரத்தில் கர்ஜனை செய்துள்ளார் மகிந்தா ராஜபக்ஷே.
அவரது இராணுவத்துக்குக் கடந்த 30 ஆண்டுகளாகத் தண்ணி காட்டி வருகிறது தமிழீழ விடுதலைப் புலிகளின் படை. 'மூன்று நாட்களில் பிரபாகரன் இருக்கும் இடத்தை நெருங்கி விடுவோம், 30 நாட்களில் கிளிநொச்சியைக் கைப்பற்றி விடுவோம்!' என்று இராணுவம் சொன்னாலும், புலிகளைப் பற்றி கிடைக்கும் தகவல்கள் மிரட்டுகின்றன!
பிரபாகரன் படை!
தன்னிடம் இராணுவப் பயிற்சி பெற்ற மாத்தையா, கிட்டு, விக்டர், புலேந்திரன், குமரப்பா ஆகிய 5 பேரைத் தன் தளபதிகளாக பிரபாகரன் அறிவித்ததுதான் இந்த இயக்கத்தின் முதல் அத்தியாயம். அரசியல் பிரிவும் ஆரம்பிக்கப்பட்டது. போராளிகள் திரள ஆரம்பித்தார்கள். ஆனால், பணமும் ஆயுதமும் இல்லை. கப்பல் கம்பெனி ஆரம்பித்து கடல் வர்த்தகத்தில் இறங்கினார் பிரபாகரன். அடுத்த சில ஆண்டுகளில் பத்துக்கும் மேற்பட்ட கப்பல் கம்பெனிகள் உருவாகின. வர்த்தகம் செய்தது பணம் சம்பாதிக்க மட்டுமல்ல, தங்களுக்குத் தேவையான ஆயுதங்களை எடுத்து வரவும் இந்தக் கப்பல்கள் பயன்பட்டன.
இவர்களுக்கான ஆயுத பரிவர்த்தனைகள் அனைத்தையும் இன்று வரை செய்து கொடுப்பதாகச் சொல்லப்படுபவர் கே.பி. என்ற குமரன் பத்மநாபன். ஹாங்காங்கில் கைது, தாய்லாந்தில் கைது என்று செய்திகள் வருமே தவிர, இன்று வரை இன்டர்போல் உட்பட யார் கையிலும் சிக்காதவர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் படித்தவர், தெற்காசியாவில் இருக்கிறார் என்று மையமாகச் சொல்வார்கள். ஆயுத சப்ளையில் புலிகள் இயக்கம் தளிர்த்தது.
இந்திய அரசின் சார்பில் கொடுக்கப்பட்ட பயிற்சியும் ஆயுதங்களும் கூடுதல் பலத்தைக் கொடுத்தன.வட கிழக்கு மாகாணங்கள் என்று சொல்லப்படும் தமிழர் பகுதிக்குள் மொத்தமாக சிங்கள இராணுவத்தைத் தடுக்கும் அளவுக்குப் பலம் வாய்ந்தவர்களாக வலம் வந்தார்கள்.
இன்றைய நிலையில், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்கள், யாழ்ப்பாணம், மன்னார், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகள் புலிகள் வசம் உள்ளன. இங்கு அரசாங்கமே இவர்கள் வசம். கல்வி, மருத்துவம், காவல், நிதி, நீதி ஆகிய முக்கியமான துறைகளின் மூலமாக இப்பகுதியில் நிர்வாகம் செய்கி றார்கள். 6 அடுக்கு நீதிமன்றங்கள் உள்ளன. சட்டக் கல்லூரி ஆரம்பித்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. வரதட்சணை கேட்டுக் கட்டாயப்படுத்தினால், தண்டனை. சாதி விட்டுச் சாதி கல்யாணம் செய்வதை எதிர்த்தால் தண்டனை. பள்ளிகளில் புதிய பாடத் திட்டங்கள். அனைத்துமே தமிழ் வழியில்தான் படிப்பு. ஆங்கிலமும் ஒரு மொழியாகக் கற்றுத் தரப்படுகிறது. மருத்துவம் உள்பட அனைத்துப் பாடங்களையும் தமிழில் கொண்டுவந்து விட்டார்கள். வேளாண்மைப் பண்ணைகளின் மூலம் விவசாயம் நடக்கிறது.
தமிழீழ வைப்பகம் என்ற வங்கி கிளிநொச்சியில் இருக்கிறது. இதற்குப் பல்வேறு இடங்களில் 12 கிளைகள் உள்ளன. ஆதரவற்ற பிள்ளைகள் வாழ செஞ்சோலை என்பது வரை தங்கள் பகுதியில் தனிஅரசாங் கத்தை அமைத்து, அவற்றைத் தளபதிகளின் பொறுப்பில் ஒப்படைத்திருக்கிறார். இந்த நிர்வாகத்துக்கும் புலிகளின் ராணுவ அமைப்புக்கும் பெரிய தொடர்புகள் எதுவும் இருக்காது. தலைவர், துணைத் தலைவர், பிரிகேடியர், சிறப்புத் தளபதி, தளபதி, கர்னல், லெஃப்டினென்ட் கர்னல், மேஜர், கேப்டன், முதலாம் லெஃப்டினென்ட், இரண்டாம் லெஃப்டினென்ட், போராளி எனப் பதவி அடுக்குகள் கொண்டது புலிகள் அமைப்பு.
தலைவர், பிரபாகரன். துணைத் தலைவராக மாத்தையா இருந்தார். அவருக்குப் பிறகு அந்தப் பதவி யில் யாரும் அமர்த்தப்படவில்லை. பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் இன்று இருப்பவர், அரசியல் துறையைக் கவனிக்கும் நடேசன். இலங்கை அரசில் போலீஸ்காரராக இருந்தவர். அப்படியே இடம் மாறி, தமிழீழக் காவல் துறையை உருவாக்கியவர். இவர் மனைவி, சிங்களப் பெண்ணாம். தமிழ்ச்செல்வன் மறைவுக்குப் பிறகு அரசியல் விவகாரங்கள் இவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அடுத்த முக்கியத்துவம் பொட்டு அம்மானுக்கு. புலிகளின் புலனாய்வுப் படை இவர் கையில். ராஜீவ் கொலை வழக்கில் பிரபாகரனுடன் தேடப்படும் நபர். சண்முகநாதன் சிவசங்கரன் என்பது இவர் பெயர்.
கடற்புலிகளின் தளபதி, சூசை. காட்டுக்குள் பிரபாகரன் நினைப்பதைக் கடலுக்குள் சாதிக்கும் சாமர்த்தியசாலி. கல்விக் கழகத்தைக் கவனிப்பவர் இளங்குமரன். இவரை பேபி சுப்பிரமணியம் என்றால் தமிழ்நாட்டுக்குத் தெரியும். தமிழகத்தின் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் அறிமுகமானவர். சமர் நூலாக்கப் பிரிவு என்ற அணி, இதுவரை உலக நாடுகளில் உள்ள போர்த் தந்திரங்கள், ஆயுத வரவுகளைப் படித்து புலிகளுக்குப் பாடம் நடத்துகிறது. இது யோகி என்பவரின் பொறுப்பு. நிதித் துறை, தமிழேந்தி என்பவர் வசம். பெண் புலிகளின் ராணுவப் பிரிவை விதூஷா, அரசியல் பிரிவை தமிழினி ஆகியோர் நடத்துகின்றனர். இவர்களை அடுத்துதான் மற்ற தளபதிகள் அணி வகுக்கிறார்கள்.
அடுத்த முக்கியத்துவம், பிரசார அணிக்கு. அரசியல் ஆய்வுகளை பாலகுமார் (பழைய ஈராஸ் தலைவர்), மு.திருநாவுக்கரசு ஆகியோர் கவனிக்கிறார்கள். புலிகளுக்கு ஆதரவாக வரும் பத்திரிகைகள், இணையதளங்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சிகளின் பட்டியல் கணக்கில்லாதது. ஆனால், அதிகாரபூர்வமாக 1983-ல் இருந்து இன்று வரை வரும் ஏடு 'விடுதலைப் புலிகள்'. இதன் ஆசிரியராக இப்போது ரவி என்பவர் இருக்கிறார். 'ஈழ நாதம்' நாளிதழ் கிளிநொச்சியில் இருந்து வருகிறது. எரிமலை கலை இலக்கிய மாத இதழ் பிரான்ஸில் இருந்து வெளியாகிறது. தமிழ் மட்டுமல்லாமல், சிங்களத்திலும் ஒலிபரப்பாகும் புலிகளின் குரல் வானொலியை தமிழன்பன் என்பவர் கவனிக்கிறார். தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியும் ஒளிபரப்பாகிறது. சிறு சம்பவம் நடந்தாலும், அதை மறு நிமிடமே இவர்கள் உலகத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்துவிடுகிறார்கள். இவர்களுக்கு 'பரப்புரைப் பிரிவு' என்று பெயர்.
புலிகள் சொல்லும் கணக்குப்படி, காடுகளுக்குள் 25 ஆயிரம் பயிற்சி பெற்ற வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால், அதிகபட்சம் 5 ஆயிரம் பேருக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை என்கிறது சிங்கள உளவுத் துறை.சீருடை அணிந்த போராளிகள் நீங்கலாக, மக்கள் படை என்ற அமைப்பு சமீபகாலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழீழப் பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் தினமும் காலையில் பயிற்சி பெறுகிறார்கள். கட்டை, கம்பு வைத்து பயிற்சி எடுத்துக்கொள்கிறார்கள். 'ஒரு கையில் விவசாயக் கருவியும் இன்னொரு கையில் துப்பாக்கியும் வைத்துத்தான் வியட்நாம் புரட்சி நடந்தது' என்ற ஐடியா இது. தங்களைத் தாங்களே பாதுகாக்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்பது புலிகள் கட்டளை.
ஏ 9 நெடுஞ்சாலைதான் தென் இலங்கையையும் தமிழீழப் பகுதியையும் பிரிக்கிறது. அந்தப் பக்கம் சிங்கள ராணுவத்தினர் சுமார் 30 ஆயிரம் பேர் கொண்ட படையும், இந்தப் பக்கம் புலிகள் தரப்பும் நிற்கின்றன. கடைநிலைப் போராளிகள்தான் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள்.இவர்களைத் தாண்டி 25-க்கும் மேற்பட்ட சிறப்புப் படையணிகள் காத்திருக்கின்றன. போரில் இறந்த சார்லஸ் ஆண்டனி, இம்ரான் பாண்டியன், மாலதி, விக்டர், கிட்டு ஆகியோர் பெயரில் இந்தப் படைஅணிகளை பிரபாகரன் உருவாக்கியுள்ளார். பெண் புலிகளின் படைகள் மாலதி, சோதியா, அன்பரசி ஆகிய பெயர்களில் உள்ளன. இவை தவிர, விமான எதிர்ப்பு, பீரங்கி, மோட்டார், கவச வாகனம் ஆகிய தனிப் பிரிவுகளும் உள்ளன. ராணுவத் தளவாடங்கள் தயாரிக்க, போர்க் கருவித் தொழிற்சாலையும், வெடிபொருள் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர், ராணுவ விஞ்ஞானக் கல்லூரியும் இருக்கின்றன.
ஆரம்பத்தில் சிங்கள இராணுவத்துக்கு அச்சுறுத்தலாக இருந்தது, கடற்புலிகள். கடந்த இரண்டாண்டுகளாக வான்புலிகள் வெலவெலக்கவைத்து வருகிறார்கள். இரண்டாண்டுகளுக்கு முன், வான வேடிக்கைகளைப் புலிகள் ஆரம்பித்து இன்று வரை 8 இடங்களில் தாக்கு தல் நடத்தியிருக்கிறார்கள். இதில் அனுராதபுரம்,வன்னி யில் நடத்திய தாக்குதலில்தான் உயிரிழப்புகள் அதிகம். சமீபத்தில் சிங்கள ராணுவ தளம், அனல் மின் நிலை யம் ஆகிய இரண்டு இடங்களிலும் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்திய பிறகுதான் இரண்டு விமானங்கள் அவர்களிடம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாம். தாக்குதல்களை வெற்றிகரமாக முடித்த பைலட் புலிகளுக்கு பிரபாகரன் விருதுகள் வழங்கிய நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இது போன்ற சில நிகழ்ச்சிகளில்தான் பிரபாகரனை முக்கியத் தளபதிகளால்கூடப் பார்க்க முடியும்.
தமிழ்ச்செல்வன் மரணத்துக்குப் பின்னால், பிரபாகரனின் இடத்தைக் கண்டுபிடிக்க பகீரத முயற்சிகள் நிகழ்ந்தன. கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சி என்ற இடத்தில் திடீர் தாக்குதலை சிங்கள ராணுவம் நடத் தியது. 'இங்குதான் பிரபாகரன் வசிக்கிறார். 40 அடி கொண்ட பதுங்கு குழியில் அவர் வீடு இருக்கிறது. வேறு இடங்களுக்குப் போவதாக இருந்தால், இந்த வீட்டில் இருந்து செல்லும் சுரங்கப் பாதை வழியாகத்தான் செல்கிறார்' என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் சொல்லி அதிர்ச்சி கிளப்பியுள்ளார். கிளிநொச்சியில் இருந்து முல்லைத் தீவுக்கு இடம்பெயர்ந்த மக்களைக் காட்டுப் பகுதிக்குள் வந்து பிரபாகரன் பார்த்ததாகச் சில செய்திகள் கூறுகின்றன. மேலும், அவர் கலந்துகொள்ளும் விழாக்கள் அனைத்தும் இரவில்தான் நடக்கிறதாம். அவரைப் பாதுகாப்பதுதான் புலனாய்வுத் துறையின் முக்கியமான வேலை. அவர் ஒரு முகாமுக்கு வருகிறார் என்றால், அங்கு பிரபாகரனிடம் மட்டும்தான் துப்பாக்கி இருக்கும். அவரது பாதுகாப்பு வீரர்கள்கூட வெளியில்தான் நிறுத்திவைக்கப்படுவார்கள்.
பிரபாகரனுக்கு மூன்று பிள்ளைகள். மூத்த மகன் சார்லஸ் ஆன்டனிக்கு 22 வயது. அவரும் புலிப் படையில் இருக்கிறார். மகள் துவாரகா லண்டனில் இருப்பதாகத் தகவல். அடுத்த மகன் பாலச்சந்திரன், அவருடனே இருக்கிறான். பல நாடுகளுக்கும் இடம் பெயர்ந்து, கடைசியில் கணவருடனே வந்து காட்டில் வாழ்கிறார் மனைவி மதிவதனி.
வரும் 26-ம் தேதி, பிரபாகரனின் 54-வது பிறந்த நாள். அதற்கு மறுநாள், புலிகள் ஆண்டுதோறும் கொண்டாடும் மாவீரர் நாள். அன்று அவர் தமிழீழ மக்களுக்காக வானொலியில் பேசுவார். புலிகளின் அடுத்தகட்டம் என்ன என்று இந்தப் பேச்சில் சொல்லப்படும்.
ரணமாகிப் போன தமிழர்கள் மட்டுமல்ல, ராஜபக்ஷேவும் பிரபாகரன் பேச்சைக் கேட்கக் காத்திருக்கிறார்!
Sunday, November 16, 2008
Sunday, November 2, 2008
Saturday, October 25, 2008
Tuesday, October 21, 2008
மஹாகவி பாரதியார் .....

.
1882-ம் ஆண்டு எட்டயபுரத்தில் பிறந்த பாரதி தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்படும் நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொள்கின்றார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசி செல்கின்றார். 1898 முதல் 1902 வரை காசியில் தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னனால் அழைத்து வரப்பட்டு காசி அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். இவ்வாறு ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்த பாரதி 1904 ஆம் ஆண்டு அத்துறையில் அவர் எழுதும் பாடல் 'விவேகபானு' இதழில் வெளியாகின்றது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளி" சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
மனைவி செல்லம்மாளுடன் பாரதியார்" மனைவி செல்லம்மாளுடன் பாரதியார்
தமிழ், ஆங்கிலம் ஆங்கிலம், இந்தி ,சமஸ்கிருதம் வங்காள மொழி" ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார். தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?
இலக்கியப் பணி
குயில் பாட்டு
கண்ணன் பாட்டு - இந்துக் கடவுளான கண்ணன் கண்ணன் மீது பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.
பாஞ்சாலி சபதம் (இன்னமும் எழுதப்படவில்லை)" பாஞ்சாலி சபதம்
ஆகியன அவர் படைப்புகளில் சில.
பத்திரிகைப் பணியும் விடுதலைப் போராட்டமும்
பாரதியார் சுதேசமித்திரன் (இன்னமும் எழுதப்படவில்லை)" சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியே மறைந்தார். சக்கரவர்த்தினி (இதழ்) (இன்னமும் எழுதப்படவில்லை)" சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905-ஆக. 1906 ), இந்தியா (இதழ்) (இன்னமும் எழுதப்படவில்லை)" இந்தியா என்ற வார இதழில் (மே 1905-மார்.1906/செப்.1906, புதுச்சேரி : 10.19.1908- 17.05.1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (திசம்பர் 1909-1910), தர்மம் (பிப்.1910),என்ற இத்ழ்களிலும் பாலபாரதா ஆர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.
தமிழா இன உணர்வு கொள் ......

அச்சம் என்பது மடமையடாஅஞ்சாமை திராவிடர் உடமையடாஆறிலும் சாவு நூறிலும் சாவுதாயகம் காப்பது கடமையடா
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடிமக்களின் மனதில் நிற்பவர் யார்மாபெரும் வீரர் மானம் காப்போர்சரித்திரம் தனிலே நிற்க்கின்றார்
யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னர்கள் காலத்திலும், அதற்குப் பின்னரும் வட தமிழீழத்தின் முக்கிய துறைமுகப்பட்டினங்களில் ஒன்றாகவும், தமிழக கோடிக்கரைக்கும் வட தமிழீழத்திற்கும் பாலமாகவும் கப்பலோடி, திரைகடல்களில் திரவியம் குவித்த மறவர்கள் வாழும் பூமிதான் வல்வெட்டித்துறை. தமிழீழச் சரித்திரத்தில் இவ்வூர் அழியாப் புகழைப் பெறுகிறது. காரணம் இங்குதான் தமிழீழ தேசிய விடுதலைப் போரை மக்கள் ஆதரவுடன் முன்னெடுத்துச் செல்லும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தவரும் தமிழீழத்தின் தேசியத் தலைவராக போற்றிப் புகழப்படுபவருமான பிரபாகரன் அவர்கள் 1954 ஆம் ஆண்டு கார்த்திகை திங்கள் 26ம் நாள் பிறந்தார். வல்வெட்டித்துறையில் பிரபலமான குடும்பம் ~திருமேனியார் குடும்பமாகும்~. இக் குடும்பத்தின் மூதாதையரான திருமேனியார் வெங்கடாசலம் என்பவர் அவ்வூரிலுள்ள வல்வை வைத்தீஸ்வரன் கோவிலைக் கட்டியும், வல்வை முத்துமாரியம்மன் கோயில், நெடியகாடு பிள்ளையார் கோயில் இரண்டையும் கட்ட உதவியும் செய்தார். இவ்வூருக்கு அருகிலுள்ள பருத்தித்துறையில் மெத்தை வீட்டு நாகலிங்கம் என்பவரின் குடும்பமும் பல கோவில்களைக் கட்டியெழுப்பிய குடும்பம் ஆகும். இவ்விரு குடும்பத்தினரும் திருமண உறவின் மூலம் இணைந்தனர். திருமேனியார் குடும்பத்தில் தோன்றிய திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளையும், நாகலிங்கம் வழித்தோன்றிய பார்வதியும் திருமணத்தில் இணைந்து கொண்டனர். இவர்களுக்குப் பிறந்த கடைசிக் குழந்தையே பிரபாகரன் அவர்கள். இவருக்கு ஒரு அண்ணனும் இரண்டு அக்காமாரும் இருக்கிறார்கள். அண்ணனும் அக்காமார்களும் திருமணம் செய்து விட்டார்கள். பிரபாகரன் அவர்களின் தந்தை இலங்கை அரசாங்கத்தின் மாவட்டக் காணி அதிகாரியாகப் பல வருடங்கள் கடமை புரிந்தவர்.பிரபாகரன் அவர்கள் தனது கல்வியை வல்வெட்டித்துறையில் ஊரிக்காடு எனும் இடத்த்pலுள்ள 'சிதம்பரா கல்லூரியில்" 10ம் வகுப்பு வரையிலும் கற்றார். யாழ்ப் பாணத்தில் அந்நாட்களில் செல்வம்மிக்க குடும்பங்களில் பிறந்த பிள்ளைகள் ஆங்கிலம் கற்பதும் வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போவதும் அரச பணிகளில் அமர்வதுமே வாழ்வின் இலட்சியமாகக் கொள்வது நடைமுறையாக இருந்து வந்தன. ஆனால் பிரபாகரன் அவர்களின் சிந்தனையோட்டம் சிறுவயதிலேயே வேறுவிதமாக இருந்தது. தந்தையுடன் வெளியிடங்களுக்குச் செல்லும்போது சிங்களக் காவற்துறையினர் அப்பாவித் தமிழர்களை அடித்து இம்சிப்பதையும் உதைப்பதையும் கண்டதினால் சிறுவனாக இருந்த பிரபாகரனின் பிஞ்சு உள்ளத்தில் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்பட்டதுடன் அவைகளே ஆழமான வடுவையும் ஏற்படுத்திவிட்டன. அதிலும் குறிப்பாகப் பிரபாகரன் அவர்கள் சிறுவனாக இருந்தபோது 1958 ஆம் ஆண்டில் நடந்த முதலாவது தமிழன அழிவில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் அவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்திவிட்டன. சிங்கள இனவெறியரால் எம்மக்கள், ஈவிரக்கமில்லாது கொடூரமாகக் கொல்லப்பட்ட நெஞ்சை உறுத்தும் சம்பவங்களை அவர் கேள்விப்பட்டதோடு, அவருடைய பெற்றோருக்கு நன்கு தெரிந்த ஒரு விதவைத்தாய் தனக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தைச் சிறுவனாக இருந்த பிரபாகரனுக்குக் கூறியபோதும் சிறுவர்களைக் கொதிக்கும் தார்ப் பீப்பாக்களினுள் உயிருடன் வீசிக் கொன்ற கோரச் சம்பவங்கள், பாணந்துறையில் இந்துக் குரு ஒருவர் உயிரோடு தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம், இவ்வாறு அநாதரவான அப்பாவித் தமிழர்கள் எவ்வாறெல்லாம் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் என்பதையெல்லாம் அவர் அறிந்தபோதும் தமிழ் மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் ஏற்பட்டது. இந்தச் சிங்கள இனவெறி அமைப்பின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உத்வேகம் அவர் மனதில் உருவாகியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று அவர் ஆழமாக உறுதியாக உணர்ந்தார். இதனால் பிரபாகரன் அவர்கள் படிக்கும் சிறுவனாக இருந்தபோது அவரும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து கைக்குண்டுகளைத் தயாரிக்கப் பழகினார்கள். ஒருமுறை பிரபாகரன் அவர்கள் கைக்குண்டுகளைத் தயாரிக்கும் போது எதிர்பாராதவிதமாகக் குண்டு வெடித்து அவரது காலில் எரிகாயம் ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் அந்த இடம் கருமையாக மாறியது. அதனால் ~கரிகாலன்~ என்னும் புனைபெயரும் பிரபாகரனுக்குச் சிறுவயதிலேயே அமைந்தது. தமிழ் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை முடித்தபிறகு மேற்படிப்புக்குச் செல்ல சிங்கள அரசின் ~தரப்படுத்தல் கொள்கை~ ஒரு தடையாக இருந்தது. 10ம் வகுப்புவரையிலும் படித்த பிரபாகரன் அவர்கள் விடுதலைப் போராளியாகச் செயற்படத் தொடங்கி விட்டதனால் படிப்பைத் தொடரவில்லை. பிரபாகரன் அவர்களின் போக்கு அவரது பெற்றோருக்குப் புரியவில்லை. மகன் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் தானே தேடி வந்தது. ஒருமுறை பிரபாகரன் அவர்களைத் தேடி காவற்துறையினர் வந்தனர். அதிகாலை 3 மணிக்கு அவரின் வீட்டுக் கதவைத் தட்டினர். கதவைத் தட்டும் சத்தம் கேட்டவுடனேயே காவற்துறையினர் வந்துவிட்டனர் என்பதைப் புரிந்து கொண்ட பிரபாகரன் அவர்கள் யாரும் அறியாமல் தப்பிவிட்டார். பிரபாகரன் அவர்களின் தாய் கதவைத் திறந்தபோது ஏராளமான காவற்துறையினர் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டுப் போனார். ஏனென்றால் பிரபாகரன் அவர்கள் ~இரகசிய இயக்கத்தில்~ இருக்கிறார் என்ற செய்தியை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை. வீடு முழுவதும் காவற் துறையினர் சோதனையிட்டனர். இறுதியில் பிரபாகரன் அவர்களைக் கண்டு பிடிக்க முடியாமல் காவற் துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பிரபாகரன் அவர்கள் தன் வீட்டிற்குத் திரும்பவே இல்லை. பிரபாகரன் அவர்கள் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்ற செய்தியை அறிந்தபோது அவரது தந்தையார் பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கே சென்று அவரை வீட்டிற்கு அழைத்துவந்தார். வீட்டிற்கு வந்த பிரபாகரன் அவர்கள் தன் பெற்றோரிடம் பின்வருமாறு கூறினார். "உங்களுக்கோ, குடும்பத்திற்கோ நான் ஒருபோதும் பயன்படமாட்டேன். என்னால் உங்களுக்கு எத்தகைய தொல்லையும் வேண்டாம். என்னை என்போக்கில் விட்டுவிடுங்கள். என்னை எதிர்பார்க்காதீர்கள்" என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிப் போய் இரகசிய இயக்க வேலையில் ஈடுபடத் தொடங்கினார்
பிரபாகரன் கூற்றுக்கள்
"இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." [1]
'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' [2]
"ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." [3]
"உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். [4]
"வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." [5]
"எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." [6]
"செய் அல்லது செத்துமடி."

Monday, October 20, 2008
Sunday, October 19, 2008
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்- சில தகவல்கள்!

, உயிர்த் தியாகம் செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர, கெஞ்சியும் கேட்டும் பெறுவதல்ல பேரம் பேசிப் பெறுவதும் அல்ல’ என்று முழங்கியவர் நேதாஜி.
சரியாக 63 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1943ம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 21ம் திகதியன்று, தற்காலிக சுதந்திர இந்திய அரசை நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அமைத்தார். பிரிட்டிஸ் ஆட்சி தொடங்கியதிலிருந்து, இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக தற்காலிக சுதந்திர அரசு ஒன்று அமைக்கப் பட்டது. ‘இந்த அரசு ஜப்பான், ஜேர்மனி, இத்தாலி உட்பட உலகில் ஒன்பது வல்லரசுகளுக்கு சமமானது’ என்று அன்றைய தினம் நேதாஜி அறிவித்தார்.1943 ஒக்டோபர் மாதம் 21ம் திகதியன்று காலையில் சிங்கப்பூர் ‘தைதோவா கெகிஜோ’ வில் நடைபெற்ற மகாநாட்டில் தற்காலிக சுதந்திர இந்திய அரசை பிரகடனப்படுத்திய நேதாஜி
“நமக்கென்று ஓர் இராணுவமும் அமைக்கப்பட்டு விட்டதனால், நமக்கென்று ஒரு சுதந்திர அரசை அமைப்பது சாத்தியமும், அவசியமும் ஆயிற்று. இந்தியாவின் முழு விடுதலைக்கான இறுதிப்போரை நடாத்துவதற்காகவே இந்தத் தற்காலிக அரசு பிறந்திருக்கின்றது”-
என்று தெரிவித்தார். உடனடியாக பல சர்வதேச நாடுகள் தற்காலிக சுதந்திர இந்திய அரசை அங்கீகரித்தன. ஒக்டோபர் 23ம் திகதியில் இருந்து நவம்பர் 18ம் திகதிக்குள் ஜப்பான, பர்மா, பிலிப்பைன்ஸ், ஜெர்மனி குரொஷியா, சீனா, மஞ்சுகோ, இத்தாலி, தாய்லாந்து போன்ற அரசுகள் தற்காலிக சுதந்திர இந்திய அரசை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தன. அயர்லாந்துக் குடியரசுத் தலைவர்கள் தனிப்பட்ட வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வைத்தார்கள்.இது சரியாக 63 ஆண்டுகளுக்கு முன்னர்-அதாவது 1943ம் ஆண்டு நடைபெற்றது. சரியாக 24 ஆண்டுகளுக்கு முன்பு-அதாவது 1982ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வொன்றை இப்போது குறிப்பிடுவது பொருத்தமாக இருக்ககூடும்.1982ம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மதுரையில் பழ நெடுமாறன் அவர்களின் இல்லத்தில் தங்கியிருந்தபோது மதுரை YMCA மண்டபத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள் இந்திய சுதந்திர அரசாங்கத்தின் பிரகடனத்தை 1943ம் ஆண்டு அறிவித்ததை நினைவு கூரும் நிகழ்ச்சி அது. இந்திய தேசிய இராணுவத்தைச் சேர்ந்த மகளிர் பிரிவுத் தளபதி கப்டன் இலட்சுமி அவர்கள் அந்த விழாவில் சிறப்புரை ஆற்ற இருந்தார். அந்த விழாவில் பேசுவதற்காக பழ நெடுமாறன் அவர்களும் அழைக்கப்பட்டு இருந்தார். அந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பழ நெடுமாறன் அவர்கள் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது தலைவர் பிரபாகரன் தானும் அந்த விழாவிற்கு உடன் வருவதற்கு விருப்பம் தெரிவித்ததால் அவரையும் அழைத்துக் கொண்டு பழ நெடுமாறன் அவர்கள் லுஆஊயு மண்டபத்திற்கு சென்றார்.விழா மண்டபத்தில் நேதாஜி அமைத்த இந்திய தேசிய இராணுவத்தின் வீரர்கள் ஏராளமாக கூடியிருந்தார்கள். தலைவர் பிரபாகரனை முன்வரிசையில் வந்து அமரும்படி கேட்டுக் கொண்டபோது அவர் அதனை மறுத்துவிட்டு பின்னால் இருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்து கொண்டு நிகழ்ச்சியை உன்னிப்பாக கவனித்தார்.
கப்டன் இலட்சுமி மேடைக்கு வந்தபோது அனைவரும் எழுந்து நின்று நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தின் கீதத்தை உரத்த குரலில் பாடினார்கள். அப்போது கப்டன் இலட்சுமியின் விழிகளிலும் கூடியிருந்த வீரர்களின் விழிகளிலும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதனையும் தலைவர் பிரபாகரன் கவனித்தார்.
நிகழ்ச்சி முடிந்து தேசியத் தலைவர் பிரபாகரனும், பழ நெடுமாறனும் திரும்பியபோது அந்த நிகழ்ச்சியைப் பற்றி மனநெகிழ்வுடன் தலைவர் பிரபாகரன் பேசிக்கொண்டு வந்தார்.
“அண்ணா! இந்த வயதான காலத்திலும் கூட அந்த வீரர்கள் நேதாஜியைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் எப்படி நெகிழ்ந்து போகின்றார்கள் என்பதைப் பார்த்தபோது நான் உருகிப் போனேன். அவர்களை எப்படி நேதாஜி உருவாக்கியிருக்கின்றார் என்பது போற்றத் தக்கதாகும்”.
- என்று தலைவர் பிரபாகரன் மனநெகிழ்வுடன் பழ நெடுமாறன் அவர்களுக்குக் கூறினார்.தலைசிறந்த போராளியும், அரசியல் ஞானியும், ராஜதந்திரியுமான நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்களின் நினைவு தினம் ஆகஸ்ட் மாதம் 18ம் திகதியாகும். 1945ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 18ம் திகதியன்று ஜப்பானுக்கு போகும் வழியில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் பயணம் செய்த விமானம் தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியதால் அவர் மரணமடைந்ததாக இன்றுவரை நம்பப் படுகின்றது.வரலாறுகள் விவாதிக்க படுகின்ற காலகட்டம் இது! தங்களுக்கு ஏற்றவகையில் வரலாற்றை தயாரித்து அளிக்கின்ற அரசியலும், அரசியல்வாதிகளும் நிறைந்த உலகம் இன்றைய உலகம். இப்படியான சூழ்நிலையில் இந்திய வரலாற்றில் ஒளிவிடும் சில மனிதர்களையும், அவர்களது தன்னலமற்ற வாழ்க்கையையும், சரியான விதத்தில் நினைவூட்டிக் கொள்வது, அவசியமானதாகும்.நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் இந்திய சுதந்திரத்திற்காக மாபெரும் பிரிட்டிஸ் சாம்ராஜ்யத்தை எதிர்த்து நேரடியாகப் போராட்டத்தில் இறங்கினார். அவருக்கு எதிராக பல அபாண்டமான அவதூறுகள் எழுந்தன. அவற்றில் அரைப்பங்கை பிரிட்டிஷ் அரசு செய்தது என்றால் மிகுதிப் பங்கை அன்றைய இந்தியத் தலைவர்கள் செய்தார்கள் என்பதே வரலாற்று உண்மையாகும்.‘சுபாஸ் சந்திரபோஸ் அவசரக்காரர்-ஆத்திரக்காரர்’ என்று கூறினார் மகாத்மா காந்தி அவர்கள். ‘சுபாஸ் சந்திரபோஸ் படபடப்பானவர்-பண்படாதவர்’ -என்று கூறினார் ஜவகர்லால் நேரு அவர்கள்.ஆனால் நேதாஜியோ ஒரு முழுமையான தேசபக்தனுக்குரிய அம்சங்கள் அனைத்தும் கொண்ட ஒரு தன்னிகர் இல்லாத் தலைவராக செயல்பட்டார். “இந்தியா வாழ்ந்தால் யாரே வீழ்வார்? இந்தியா வீழ்ந்தால் யாரே வாழ்வார்?” என்று முழங்கிய போராளி அவர்.நேதாஜியின் வாழ்க்கை அனுபவங்களும் அபூர்வமானவையே! தியாக உணர்வும், துறவு மனப்பான்மையும், இளமைப்பருவம் முதலாகவே நேதாஜியின் வாழ்வொடு பின்னிப்பிணைந்து இருந்தன. தனது 16வது வயதில் துறவியாக விரும்பி தனது வீட்டை விட்டே வெளியேறினார். 24வது வயதில் மிகுந்த செல்வாக்கைக் கொண்ட உயர் பதவியான ஐ.சி.எஸ் உத்தியோகத்தை தூக்கி எறிந்தார். கட்டாக் நகரில் தாம் பிறந்த மாளிகையை தனது 35வது வயதில் தேசத்திற்காக அர்ப்பணித்தார். 42வது வயதில் முழுப்பெரும்பான்மைப் பலத்தோடு வெற்றி பெற்றிருந்த அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் பதவியைத் தூக்கி எறிந்தார்.
44வது வயதில் தன் உயிரினும் மேலாகக் கருதிய பாரத தேசத்தை விடுவிக்க வேண்டும் என்பதற்காக தன் தேசத்தை விட்டே வெளியேறி, தன் உயிரையே பணயம் வைத்து ஜேர்மனியிலும், ஜப்பானிலும், கிழக்காசிய நாடுகளிலும் அலைந்து திரிந்து ஒரு தற்காலிக சுதந்திர அரசை அமைத்து இந்திய தேசிய இராணுவத்தைத் திரட்டி போரிட்டு உலக வரலாற்றிலேயே ஒரு புதிய சாதனையை அத்தியாயத்தை உருவாக்கிவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள்.!‘ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, இரத்தம் சிந்தி, உயிர்த் தியாகம் செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர, கெஞ்சியும் கேட்டும் பெறுவதல்ல பேரம் பேசிப் பெறுவதும் அல்ல’ என்று முழங்கியவர் நேதாஜி.
அதேநேரம் காங்கிரஸ் தவைர்கள் சிலரது செய்கைகள் நேதாஜியை மனம் நோக வைத்தன. என்பதையும் இங்கு நாம் குறிப்பிட விரும்புகின்றோம். சில சம்பவங்களை வெளியில் இப்போது அதிகம் பேசப்படாத சில சம்பவங்களை இங்கு நாம் சுட்டிக்காட்ட விழைகின்றோம்.1928ம் ஆண்டு மே மாதத்தில் நடந்த மராட்டிய மாநில காங்கரஸ் அரசியல் மாநாட்டிற்கு தலைமை தாங்கிய நேதாஜி, பூரண சுதந்திரமே இந்தியாவின் இலட்சியம் என்று பிரகடனம் செய்தார். ஆனால் மோதிலால் நேருவும் மகாத்மா காந்தியும் இந்தியாவிற்கு ஒரு பூரண குடியேற்ற நாட்டு அந்தஸ்து- (னுழஅinழைn ளுவயவரள) தந்தாலே போதுமானது என்ற ரீதியில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, பூரண சுதந்திர இந்தியா என்ற பிரகடனத்தை புறம் தள்ள்pனார்கள். ஆனால் இந்த பூரண சுதந்திர இந்தியா என்ற தீர்மானம் ஏற்கனவே 1927ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற 42வது காங்கிரஸ் மகாசபைக் கூட்டாத்தில் நிறைவேற்றப் பட்டிருந்தது. ஆகவே ஏற்கனவே நிறைவேற்றப் பட்டிருந்த தீர்மானத்திற்கு எதிராக மகாத்மா காந்தியும், மோதிலால் நேருவும் முடிவு எடுத்ததை நேதாஜி எதிர்த்தார். மகாத்மா காந்தியின் இந்த முடிவு பிழை என்றும் பூரணசுதந்திரமே இந்தியாவின் இலட்சியம் என்ற பிரகடனமே சரியானது எனறும் நேதாஜி வாதிட்டார். நேதாஜியின் தர்க்கம் தீர்க்க தரிசனமாகப் பின்னர் பலித்தது.1929ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி லாகூரில் இந்திய காங்கிரஸ் மகாநாடு நடைபெற்றது. அப்பொழுது பூரண சுதந்திரமே இந்தியாவின் இலட்சியம் என்ற பிரகடனத்தை மகாத்மா காந்தியே முன்மொழிந்தார் அதனை ஆதரித்துப் பேசிய நேதாஜி கீழ்வருமாறு கூறினார்.‘அன்று இத்தீர்மானத்தை எதிர்த்த அதே மகாத்மாஜியால் அன்று முன்மொழியப்பட்டு எங்களது தீர்மானம் பண்டித மோதிலால் நேருவால் ஆமோதிக்கப்பட்டு அன்று நிறைவேறுவதை காண நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். ஆனால் இந்தத் தீர்மானத்தை கிடப்பில் போட்டு விடாமல் உள்ளபடியே நாம் செயல்பட வேண்டுமானால் அதற்கு நான் கூறும் ஒரு திருத்தத்தையும் ஏற்றுக் கொள்ளும்படி இந்தச் சபையை நான் கேட்டுக் கொள்கின்றேன்.’‘பரிபூரண சுதந்திரத் திட்டம்’ வெற்றி பெற்று இங்குள்ள பிரிட்டிஸ் ஆட்சியை நாம் சிறிதும் மதிக்கக் கூடாது பிரிட்டிஸ் அரசாங்கத்தை திணறச் செய்வதற்காக அயர்லாந்தில் அமைக்கப்பட்டது போல ஒரு சுதந்திர இந்திய போட்டி அரசாங்கத்தை நாம் அமைக்க வேண்டும்’ என்று ஒரு திருத்தத்தை நேதாஜி கொண்டு வந்தார். சுபாஸ் சந்திரபோஸின் திருத்தத்திற்கு பதில் அளித்துப் பேசிய மகாத்மாகாந்தி, “சுபாஸ் கூறுவது சிறந்த யோசனைதான்! ஆனால் இன்று அதற்கு வேண்டிய மக்கள் சக்தியும் சாதனங்களும் கிடைக்குமா என்பதைச் சற்று சிந்தித்தல் அவசியம்”- என்று கூறி நேதாஜியின் திருத்தத்தை நிராகரித்தார். நேதாஜி கொண்டு வந்த அத்திருத்தம் தோல்வியுற்றது.அதுமட்டுமல்ல-அன்றைய தினம் இன்னுமொரு முறைகேடான விடயமும் அந்த லாகூர் மாநாட்டில் நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுவிற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் வேலை ஜனவரி 2ம் திகதி காலையில் நடக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ஜவகர்லால் நேரு அறிவித்திருந்தார். ஆனால் சுபாஸ் சந்திரபோசும் மற்றைய வங்காளத் தலைவர்களும் இல்லாத நாளான ஜனவரி முதலாம் திகதியன்றே செயற்குழு உறுப்பினர் தேர்தலை நேரு நடாத்தி விட்டார். அதாவது அறிவிக்கப்பட்ட நாளுக்கு ஒரு நாள் முதலாகவே இத்தேர்தல் நடாத்தப்பட்டது. இதனால் செயற்குழு உறுப்பினர் பட்டியலில் நேதாஜியின் பெயர் இடம் பெறவில்லை. சரியாக சொல்லப்போனால் நேதாஜிக்கு ஆதரவாளர்களைத் தவிர்த்து அவருக்கு எதிரானவர்களை அந்தத் திடீர் தேர்தல் அங்கத்தவர்களாக நியமித்திருந்தது.செய்தியை அறிந்த நேதாஜி திடுக்கிட்டு போனார். ஜவகர்லால் நேருவா இப்படிச் செய்தார் என்று நேதாஜியால் நம்பவே முடியவில்லை. அடுத்தநாள் மாநாட்டில் பேசிய நேதாஜி செயற்குழு உறுப்பினர் தேர்தல் முறையாக நடக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி வன்மையாக இச்செயலைக் கண்டித்தார். காங்கிரஸ் செயற்குழு, மிதவாதிகளின் கைப்பொம்மையாகச் செயல்படுவதாகக் கூறிய நேதாஜி ‘காங்கிரஸ் ஜனநாயக கட்சி’ என்ற புதிய கட்சியை அமைப்பதாக அன்றைய தினம் தெரிவித்தார்.நேதாஜியின் அரசியல் வாழ்க்கை போராட்டமும், சிறைவாசமுமாகத் தொடர்ந்தது. வெளிநாடுகளுக்கு பயணம் செய்து இந்திய சுதந்திரப் பேராட்டத்திற்காக அவர் ஆதரவு திரட்டியும் வந்தார். வியன்னா நகரில் நேதாஜி இருந்தபோது ஜவகர்லால் நேரு கடிதம் ஒன்றை நேதாஜிக்கு எழுதினார். லட்சுமணபுரியில் நடக்கவிருக்கும் காங்கிரஸ் மகாசபைக்கு சுபாஸ் சந்திரபோஸ் தலைமையேற்று நடத்த வேண்டும் என்று நேரு வேண்டியிருந்தார். ஆனால் பம்பாய் துறைமுகத்தை நேதாஜி வந்தடைந்த போது அவரைப் பயங்கரவாதி என்றும், பயங்கரவாதத்தை பரப்புகின்ற தலைவர் என்றும் பிரிட்டிஸ் அரசு குற்றம் காட்டிக் கைது செய்தது.சுமார் 11 மாதங்கள் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆயினும் 1937ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் திகதியன்று கல்கத்தாவில் காங்கிரஸ் கட்சித் தலைவராக நேதாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.இரண்டாவது உலக மகாயுத்தம் அப்போது ஆரம்பமாகியிருந்தது. இந்த யுத்தத்தில் இங்கிலாந்து முக்கிய பங்கு வகிக்கும் இத்தருணத்தில், அதற்கு இடையூறு செய்வது போல் சுதந்திரத்திற்கான கிளர்ச்சிகளைச் செய்யக்கூடாது என்பது மகாத்மா காந்தியின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால் சுபாஸ் சந்திரபோஸோ வேறு கருத்தினைக் கொண்டிருந்தார்.“இந்த யுத்தத்தில் இந்தியாவின் அனுமதியை இங்கிலாந்து கேட்கவில்லை கேட்காமலே யுத்தத்தில் நமது நாட்டைப் பிணைத்தவர்களுக்காக, நாம் ஏன் தயங்க வேண்டும்?. ஏன் தயவு காட்டவேண்டும்? நம்முடைய சுதந்திரத்தைப் பெறுவதற்காக கடவுள் தந்த அருமையான வாய்ப்பு இது. இதுவே தகுந்த தருணம் இதனை நழுவ விடுவது மதியீனமாகும்”- --என்பதே நேதாஜியின் நிலைப்பாடாக இருந்தது.போராட்டம் இன்றிச் சுதந்திரத்தை பெற யாராலும் முடியாது. போராடித்தான் சுதந்திரத்தை பெறவேண்டும் குறைந்த பட்ச செயல் திட்டம் ஒன்றை வைத்துக் கொண்டு காங்கரஸ் கட்சி சுதந்திரப் போராட்டத்தைத் துரிதப்படுத்த வேண்டும். என்றும் நேதாஜி வற்புறுத்தி வந்தாலும். இந்த வேளையில் மீண்டும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் வந்தது. நேதாஜிக்கு எதிராக பட்டாபி சீத்தாராமையா நிறுத்தப்பட்டார்.
பட்டாபி சீத்தாராமையருக்கு ஆதரவாக காந்திஜி ஜவகர்லால் நேரு, ராஜாஜி, ராஜேந்திர பிரசாத், வல்லபாய் பட்டேல், கிருபளானி போன்ற நாடறிந்த தலைவர்கள் இருந்தார்கள். 1939ம் ஆண்டு ஜனவரி மாதம் 29ம் திகதி அன்று காங்கரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் மகத்தான வெற்ற்p அடைந்தார். நேதாஜியின் வெற்றி மகாத்மா காந்திக்கும், மற்றவர்களுக்கும் பேரதிர்ச்சிpயை அளித்தது. நாட்டு மக்களுக்கோ அது அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.ஆனால் காங்கிரஸ் கட்சிக்குள் நிலைமை மோசமானது. இவ்வேளையில் மகாத்மா காந்தியும் தனது கருத்தை வெளிப்படையாகவே சொன்னார். “சுபாஸ் சந்திரபோஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவராகக் கூடாது என்பதற்காகவே நான் பட்டாபி சீத்தாராமய்யாவை தேர்தலில் நிற்கச் சொன்னேன். எனவே பட்டாபியின் தோல்வி, என்னுடைய தோல்வி என்பதை ஒப்புக் கொள்கிறேன்”- என்று மகாத்மா கூறினார். மகாத்மா காந்தியின் அறிக்கையைப் பார்த்து நேதாஜி திடுக்குற்றார். தமது வெற்றியை மகாத்மா காந்தி தன்னுடைய தோல்வி என்று குறிப்பிட்டதை எண்ணி நேதாஜியின் மனது வேதனையுற்றது.காந்தியடிகளின் விருப்பத்தை அறிந்த மற்றைய காங்கரஸ் தலைவர்கள் நேதாஜியுடன் ஒத்துழைக்க மறுத்தார்கள். நேதாஜி தன்னுடைய கடமையை செவ்வனே செய்ய முடியாத நிலையை காங்கரஸ் கட்சிக்குள் சிலர் உருவாக்கினார்கள. ஆகவே வேறு வழியின்றி நேதாஜி தன்னுடைய தலைமைப் பதவியை இராஜினாமா செய்தார். கல்கத்தாவில் உள்ள ஹஸ்ரா பூங்காவில் நேதாஜி நிகழ்த்திய நான் ஏன் இராஜினாமா செய்தேன் என்ற சொற்பொழிவு, செறிவும், பொருத்தமும் நிறைந்த பிரசித்தமான ஒன்றாகும்.நேதாஜியோ வாளாவிருக்கவில்லை. ஜேர்மனி, ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளுடன் நேதாஜி ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு அதில் கைழுத்திட்டார். இந்திய நாட்டில் வேரூன்ற்pய அன்னிய ஆட்சியை அகற்றுவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக இந்த மூன்று நாடுகளும் ஒப்பந்தத்தில் கூறியிருந்தன.நேதாஜி பல நாடுகளுக்கும் சென்று, இந்திய தேசிய இராணுவத்தைக் கட்டியெழுப்பி பயிற்சி கொடுத்தார். பயிற்சி முற்றுப்பெற்ற வீரர்களைப் பகுதி பகுதியாக பிரித்தார். சிங்கப்பூர், பர்மா, மலேயா, தாய்லாந்து நாடுகளுக்குத் தன்னுடைய படை வீரர்களை அனுப்பினார். நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தின் அங்கத்தவர்களாக ஜான்சிராணி என்கின்ற பெண்கள் படையும் பாலர் படையும் இருந்தன. பன்ன்pரண்டு வயத்pற்கு மேல் பதினெட்டு வயதிற்கு உட்பட்ட இளையவர்களின் படையே பாலர் படையென அழைக்கப்பட்டது. இந்தப்படையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட இளையவர்கள் இருந்தார்கள்.இரண்டாவது உலகப்போரில் ஜப்பான் கைப்பற்றிய அந்தமான் நிக்கோபர் தீவுகளை ஜப்பான் அரசு நேதாஜியிடமே கையளித்தது. 1943ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி இந்தியாவின் மூவர்ணக் கொடியை அந்தமான் தீவில் நேதாஜி பறக்க விட்டார்.1944ம் ஆண்டு மார்ச் மாதம் 18ம் திகதியன்று நேதாஜியின் இராணுவம் இந்திய மண்ணில் கால் பதித்தது. நாகலாந்து மணிப்பூர் சமஸ்தானங்களைக் குறிவைத்து படைகள் முன்னேறின. இடைவிடாது போரிட்டு மணிப்பூரின் பல பகுதிகளை இந்திய தேசிய இராணுவம் கைப்பற்ற்pயது. மணிப்பூரின் தலைநகரம் இம்பால் அதைக் கடந்து விஸ்ணுபூர் என்று நேதாஜியின் இராணுவம் முன்னனேறியது. விஸ்ணுபூர் பிடிபட்டால் பிறகு வங்காளம் டெல்லி என்று முன்னேற வாய்பிருந்த வேளையில் ஜப்பான் அமெரிக்காவிற்கு அடிபணிந்தது. நேதாஜியின் படை பர்மாவுக்கு பின்வாங்க நேர்ந்தது. நேதாஜியோ கலங்கவில்லை. நாம் ஆடிய முதல் ஆட்டம் இது. இதில் தோற்றுப் போனாலும் இத்தோல்வியே இனிவரும் வெற்ற்pகளுக்கு படிக்கல்லாக அமையும். என்று முழங்கினார். ஆனால் 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் திகதியன்று சரியாக 61 ஆண்டுகளுக்கு முன்பு விமான விபத்தில் நேதாஜி உயிர் இழந்ததாக அறியப்பட்டது.நேதாஜி அஞ்சா நெஞ்சம் படைத்த தீர்க்கதரிசியாக விளங்கினார். ஆங்கில அமெரிக்க ஏகாதிபத்தியம் குறித்து 61 ஆண்டுகளுக்கு முன்பு நேதாஜி கூறியது அப்படியே நடக்கின்றது. “அமெரிக்க எஜமானனின் கைப்பிடிச் சங்கிலியில் பிணைக்கப்பட்ட ஏவல் நாயாகவே எதிர்காலத்தில் பிரிட்டன் விளங்கும்” என்று நேதாஜி அன்றே சொன்னார்.சற்று ஆழமாக கூர்ந்து நோக்கினால் நேதாஜியின் தூண்டுதலும் போராட்டங்களும், கருத்துக்களும் நடவடிக்கைகளும்தான் காந்தியடிகள் ஆக்கிரோசமான பாதையை உத்வேகத்துடன் தேர்ந்தெடுக்க காரணமாக இருந்தது என்பது புலனாகும்.இந்த வேளையில் நேதாஜி குறித்து தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் கூறியதை இங்கு தருவது பொருத்தமாக இருக்கும்.‘சிறுவயது முதல் இந்திய விடுதலைப்போராட்ட வரலாறுதான் என்னைக் கவர்ந்திருந்தது. இநதப் போராட்டத்தில் நேதாஜி அவர்கள் கொண்டிருந்த பங்கு என்னை ஆழமாகத் தொட்டது.‘சுபாஸ் சந்திரபோஸின் வாழ்க்கை என்னைக் கவர்ந்தது. அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் நூல் வடிவில் வந்தன. அவற்றை படித்தேன். அவை அப்படியே என் நெஞ்சில் படிந்தன. கடைசித்துளி இரத்தம் இருக்கும்வரை என் மண்ணுக்காக நான் போராடுவேன். என்ற நேதாஜியின் வீரஉரையை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். நினைவிற்கு வரும்போதெல்லாம் இந்தச் சொற்கள் என் நெஞ்சை சிலிர்க்க வைத்தன,’- என்று தேசியத் தலைவர் குறிப்பிட்டிருந்தார்.கடைசியாக ஒரு தகவல். மிகச் சிறந்த சுதந்திரப் போராட்டத் தலைவரான நேதாஜி சுபாஸ் சந்திரபோஸை பெற்றெடுத்த அந்த தியாகத் தாயின் பெயர் என்ன தெரியுமா வாசகர்களே? அவரது பெயர் -பிரபாவதி!இந்த ஆய்வு எழுதுவதற்கு பல நூல்கள் பயன் பட்டபோதும் குறிப்பாக “நேதாஜி எழுதிய நூல்கள், நேதாஜி பேசுகின்றார், நேதாஜியின் வீரவரலாறு, வீரத்திருமகன், நேதாஜியின் போர்முறைகள் மற்றும் நந்தன் சஞ்சிகையும்” பெரிதும் பயன்பட்டன. சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
Friday, October 10, 2008
Monday, September 29, 2008
Sunday, September 28, 2008
உன்னால் முடியும்.....
Subscribe to:
Posts (Atom)