இரவு நேரங்களில் திடீரென விளக்கை எரிய விடுபவர்களா நீங்கள்? அப்படியானால், இனி அவ்விதம் செய்ய வேண்டாம். இரவில் விளக் கெரிந்தால் புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஓர் ஆய்வில், இரவு நேரங்களில் திடீரென விளக்கைப் போட்டால், அதனால் ஏற்படும் வெளிச்சத்தால் நம் உடலில் உள்ள செல்கள் அதிக அழுத்தத்துக்கு உள்ளாவதாகத் தெரிய வந்தது. இந்த அதிக அழுத்தம் புற்றுநோய்க்கு வழி வகுத்து விடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அடர்த்தி மிகுந்த இரவில் திடீரென ஆனால் குறுகிய நேரத்துக்கு ‘பளீர்’ என்று விளக்கு எரிந்தால் கூட, புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் கண்டறிந்துள் ளனர். இதுகுறித்து விஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற்ற பென்ஷ்லோமோ என்பவர் கூறுகையில்,’இரவு நேரத்தில் செயற்கையாக ஏற்படுத்தப்படும் எவ்வித வெளிச்சமும் நமது உடலைப் பாதிக்கும். நேரத்துக்கு ஏற்றாற்போல் செயல்படும், நம் உடலின் கடிகாரம் அதனால் பாதிக்கப்படும். மிக மிகக் குறைந்த வெளிச்சம் கொண்ட இரவு விளக்குகள் இருந்தால் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். அவைதான் பாதுகாப்பானவை’ என்று தெரிவித்தார்
Tuesday, April 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment