உடலை ஆரோக்கியமாக வைக்க ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டியதில்லை என்ற பழமொழி எவ்வளவுக்கு எவ்வளவு உண்மை என்பதை தொடர்ந்து நடைபெறும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆப்பிளுக்கு பல்வேறு அரிய குணங்கள் இருப்பது பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மது போதை அடிமைகளை மீட்கவும் கூட ஆப்பிள் உதவுகிறதாம்.
போதைப் பழக்கத்தில் இருந்து விடுபட்டு, நமது உடல் ஆரோக்கியம் மேம்படவும் நம் உண்ணும் உணவிலுள்ள நச்சுகளை நீக்கவும், ரத்தத்தில் கலந்துள்ள நுண்கிருமிகளை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்யவும் பழங்களை உண்ணுதல் நல்லது.
இந்த பழங்கள் என்று குறிப்பிட்டதில் முதலிடத்தை பிடிப்பவை ஆப்பிள் பழமே. பைரஸ் மேலஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட போமேசியே குடும்பத்தைச் சார்ந்த ஆப்பிள் மரங்கள் குளிர்ச்சியான பிரதேசங்களில் ஏராளமாக விளைகின்றன.
கருஞ்சிவப்பு நிறத்தோலை உடைய ஆப்பிள் பழங்களே உண்ணத் தகுந்த பழங் களாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Monday, April 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment